வனஹபுவ கல்வி அபிவிருத்தி சங்கம்
பாடசாலைக் கல்வியில் சிறந்த அடைவு
இந்த வேலைத் திட்டத்தின் கீழ் எமது கிராமத்தில் இருந்து பாடசாலை செல்லும் மாணவர்களின் மேலதிக கற்றலுக்கான "கற்றல் வள நிலையம்" ஒன்று நடத்தப்படுகின்றது. தரம் 3 தொடக்கம் 11 வரையான மாணவர்கள் மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து இரவு 8:30 வரை கற்றலில் ஈடுபடுவர். அவர்களுக்கான வழிக்காட்டிகளாக கிராமத்தின் ஆசிரியர்களும் கற்ற இளைஞர் யுவதிகளும் செயற்படுகின்றனர்.
ஆசிரியர் ஒருவருக்கான ஒரு நாளைக்கான கொடுப்பனவாக ரூபா 100 வழங்கப்படுகின்றது. அவ்வகையில் ஒரு நாளைக்கு 9 வகுப்புகளும் வகுப்புகளுக்கும் 900 ரூபாய் தேவைப்படுகிறது ஒரு மாதத்தில் 22 நாட்களுக்கு 19 800.00 ரூபாய் தேவைப்படுகின்றது. வகுப்பறைக்கான எழுது கருவிகள் போன்ற செலவுக்காக 500 ரூபா அளவில் செலவாகின்றது. இவ்வகையில் ஒரு மாதத்திற்கு ரூ 20 300.00 செலவாகின்றது.
இந்த கற்றல் வள நிலையத்திற்கு பொறுப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு 2000 ரூபாவும், அவரது தொலைபேசி செலவுக்காக 500 ரூபாவும் வழங்கப்படுகின்றது. இந்த கற்றல் வள நிலையத்தில் கற்றல் வசதிகள் மட்டுமன்றி கற்றல் கற்பித்தல் வழிகாட்டல் பாடரீதியான விசேட கருத்தரங்குகள், மாணவர்களின் ஆளுமை விருத்திக்கான கலை, இலக்கிய மன்றங்கள், மாணவர் ஒன்றுகூடல் கூட்டங்கள் என்பனவும் இடம்பெறுகின்றன.
No comments:
Post a Comment