Wanahapuwa Educational Development Association
வனஹபுவ கல்வி அபிவிருத்திச் சங்கம்
2016
ஆண்டறிக்கை
அல்ஹம்துலில்லாஹ். எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே உரித்தாகும். WEDA என்ற "வனஹபுவ கல்வி அபிவிருத்திச் சங்கம்" ஆரம்பிக்கப்பட்டு 1 வருடம் நிறைவடைகிறது. எனசல் கொல்ல மத்திய கல்லூரியிலும், அல் ஹிக்மா பாடசாலையிலும் கல்வி கற்கின்ற எமது கிராமத்தின் மானவர்கள் கல்வியில் பின்னடைந்துருக்கின்றனர் என்ற முறைப்பாடு பலக்காலமாக பெற்றார்கள், ஆசிரியர்கள், நலன்விரும்பிகளால் முன்வைக்கப்பட்டு வந்தது. இதனை கருத்திற்கொண்டு அதற்கான பரிகார நடவடிக்கையாகவே மஸ்ஜித் நிருவாக சபை கல்விக் குழு ஒன்றை 2014ம் ஆண்டு தெரிவு செய்த்தது.
அக்குழு 2015.09.26 ஆம் திகதி ஒன்று கூடி அதன் நிர்வாக சபை தெரிவு செய்தது. அதன் தலைவியாக ஹாஜியானி நாகூர் உம்மா காதர் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.
அந்த கல்விக்குழு பலமுறை நடத்திய கூட்டங்களில் தீர்மானத்திற்கமைய சங்கத்தின் பெயர், அதன் வேலைத்திட்டம், தூர நோக்கு, நோக்கக் கூற்று, நிர்வாக கட்டமைப்பு என்பவற்றையும் வருடத்திக்கான உத்தேச வரவு செலவு விபரங்களை தயாரித்தது.
👇👇
சங்கத்தின் நோக்கக் கூற்று, தூர நோக்கு மற்றும் செயல் திட்டங்களை பார்வையிட....
ஆரம்ப காலத்தில் "கல்வி தொழில் பொழுது போக்கு மேம்பாடு" என்ற நோக்கக் கூற்று பின்னர் "திறன் விருத்தியும் ஊக்குவிப்பும்" என மாற்றப்பட்டது.
அனைத்து திட்டங்களையும் முன்னெடுப்பதற்காக உப குழுக்களும் நியமிக்கப்பட்டன. அவ்வடிப்படையில் "பாடசாலைக் கல்வியில் சிறந்த அடைவு" என்ற உப குழு மாணவர்களுக்கு உபகார வகுப்புக்கள் நடத்தியது. இவ் வகுப்புக்கள் 2016 ஜனவரியில் ஆரம்பிக்கபட்டது. அதில் தரம் 3 - 11 வரை சுமார் 250 மாணவர்களுக்கு மாலை, இரவு நேரங்களில் வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன. இவ்வகுப்புக்களில் சுமார் 25 ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் உதவி புரிகின்றனர். வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை ஒரு நாளைக்கு ஒரு பாடம் வீதம் 5 வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன. அவ்வகையில் ஒரு நாளைக்கு 9 வகுப்புக்கள் வீதம் மாத்திற்கு 180 வகுப்புக்கள் நடத்தப்படுகின்றன. ஒன்றரை மணிநேரம் நடைப்பெறும் இவ்வகுப்புகளுக்கும் ஆசிரியர் கொடுப்பனவாக நாலொன்றிற்கு 100/= வழங்கப்படுகிறது. கட்பித்தலை இலகுபடுத்த அனைத்து வகுப்புக்களும் 5 படங்களுக்கும் உரிய செயல் நூல்கள் கொள்வனவு செய்யப்பட்டு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்.
சங்கத்தின் இரண்டாவது நோக்கக் கூற்றான "ஆழமான ஆன்மிக அறிவு" என்ற விடயத்தை முன்னெடுக்கும் குழுவானது, அஹதிய்யா கல்வியை சீராக நடத்தி வருகிறது. அதன் ஆசிரியர்களுக்கு மாத்திற்கு 600/= வீதம் கொடுப்பணவு வழங்கும் முறையையும் ஈடுபடுத்தியது ஆழமான ஆன்மிக ஏற்பாட்டின் ஓர் அம்சமாக இக்குழு குர்ஆனிய மாதப் போட்டிகளை 2016ம் ஆண்டு ரமழானில் நடத்தியது. குர்ஆனும், அன்றாட துஆக்கள், அவ்ராதுகளுடன் சம்மந்தப்பட்ட போட்டிகளில் பங்கு பற்றிய மாணவர்களுக்கு இவ் வருடம் நோன்புப் பெருநாள் தினத்தன்று பரிசில்கள் வழங்கப்பட்டன.
மாணவர்களை மட்டுமன்றி பெற்றார்களையும் அறிவூட்டுவதன் அவசியத்தை அறிந்த சங்கம் "அறிவார்ந்த பிள்ளை வளர்ப்பு" என்ற உப குழு மூலம் மாதாந்தம் வாரத்தின் 2வது சனிக்கிழமை பி.ப 2 மணிக்கு பெற்றார் கருத்தரங்குகளை நடத்துகிறது. அடன் முதலாவது கருத்தரங்கினை
அஷ்ஷெய்க் A.R.I யஃகூப் (இஸ்லாஹி) அவர்கள் நடத்தினார்கள். ஏனைய கூட்டங்கள் சங்கத்தின் உப தலைவர், செயலாளர், உப குழு தலைவர் என்போரால் நடத்தப்பட்டன.
வாசிப்பின் மூலமே அறிவார்ந்த சமூகம் உருவாக முடியும் என்ற அடிப்படையான உண்மையினை மறக்காமல் "வாசிப்பை நேசித்தல்" என்ற உப குழு தனது பணியை முன்னெடுத்தது. அதன் திட்டங்களுள் ஒன்றாக தினகரன், விடிவெள்ளி பத்திரிகைகள் என்பனவும் சிறுவர் பத்திரிகையாக விஜய், ஜீனியஸ் என்பனவும் சிறுவர் சஞ்சிகையான அகரமும் வாசிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் நூல்கள் வாசிப்பதற்கான ஏற்பாடுகளை செய்யவதற்காக, புத்தகக் கொள்வனவு இடம்பெறவுள்ளது. புத்தகங்கள் விற்பனைக்கும் இரவல் கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். இன்ஷா அல்லாஹ்.
சங்கத்தின் ஐந்தாவது நோக்கக் கூற்றான கல்வி தொழில் பொழுது போக்கு மேம்பாடு என்ற விடயம் முன்வைக்கப்பட்டது. பின்னர் அது "திறன் விருத்தியும் ஊக்குவிப்பும்" என்பதாக மாற்றப்பட்டது. அதன் கீழால் குர்ஆனிய மாதப் போட்டிகளும் வருடாந்த பரிசளிப்பு விழாவும் நடத்தப்படுகிறது.
WEDA சங்கம் நடத்திய உபகார வகுப்புக்களில் கற்ற மாணவர்களுள் முதலாவது குழுவினர் இவ்வருடம் க.போ.த சாதாரண தரப்பரீட்சைக்குத் தோற்றுகின்றனர். எதிர் காலத்தின் சங்கத்தினை பொறுப்பேற்கவுள்ள இம்மாணவர்களுக்கான பிரியாவிடை வைபவம் 30.11.2016 அன்று நடத்தப்பட்டது. அவர்களுக்கு நினைவுச்சின்னம் பரிசளிப்பு விழாவன்று வழங்கப்பட்டது.
சங்கம் ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடையும் தருவாயில் சங்கத்தின் தூர நோக்கைத் தெளிவுப்படுத்தும் "தூர நோக்கக் கீதம்" இயற்றப்பட்டது.
மாணவர்களுக்கு சீருடையாக ஆண்களுக்கு டீ சேர்ட்டும் பெண்களுக்கு ஸ்கார்ப்பும் சங்கத்தின் பெயர் பொறிக்கப்பட்டு இலவசமாக வழங்கப்பட்டது.
மேலும் சங்கத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு விஷேட மலரொன்று பரிசளிப்பு விழாவன்று விடிவெள்ளி பத்திரிகையில் வெளியாகியது.
அத்துடன் சங்கத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு நினைவு மலரொன்றும் வெளியிடப்படுகின்றமை குறிப்பிடத்தத்தக்கது.
No comments:
Post a Comment